திருரத்தம் புரண்டோடி பெருவெள்ளமாய்
என் மீது பாய்ந்திட நான் சுத்தமாகினேன்
என் பாவம் நீங்கினதே
விண்வாழ்வின் நன்மைகள் நான் பெற்றிட
உம்மை என்றும் துதிப்பேன்
என்றும் உம்மை துதிப்பேன் - கல்வாரி
உம் பெலனால் என்னை தேற்றிடுமே
ஊழியம் செய்திடவே
தேவா அருள் செய்குவீர் - கல்வாரி
இன்னிலம் தன்னில் நான் பிரகாசிக்க
உம் கரம் பற்றிடுவேன்
உம் வழி நான் நடப்பேன் - கல்வாரி
அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்
சாய்ந்திடுவேன் நானுமே
இயேசுவை என்றும் விடேன் - கல்வாரி
ஜீவ பலியாகப் படைக்கிறேன்
ஏழையான் காணப்பட
நீர் என்னைக் காத்து கொள்வீர் - கல்வாரி