கரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே
அக்கினி ஜூவாலையன்றோ
தண்ணீரும் வௌ்ளங்களும்
தணிக்க முடியாதையா
பூத்த ரோஜாவே
பள்ளத்தாக்கின் நடுவில்
மலர்ந்த லீலி மலரே
உந்தன் புகழ் தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே
கிச்சிலி மரம் நீரே
அன்பரே உம் நிழலில்
அமர்ந்து இன்புறுவேன்
வயல் வெளியில் தங்கிடுவோம்
நேசத்தின் உச்சிதங்களை
நிறைவாய் பொழிவேன் ஐயா
முத்தங்கள் செய்திடுமே
உம்மைப்போல் மாற்றிவிடும்
உமக்குள் வைத்துக் கொள்ளும்