காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலாவினின்று பாயுதே
விலையேரப் பெற்றோனாய் உன்னை - மாற்ற
விலையாக ஈந்தனரே
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையினும் அன்பு வைத்தே
தன் ஜீவனை ஈந்தாரே - விலையேரப்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகிறார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே - விலையேரப்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பிதையே
சிந்தித்தே சேவை செய்வேன் - விலையேரப்
அவனை விசாரிக்கவும்
மண்ணிலவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே - விலையேரப்