எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே - தம் கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக்கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை
மளம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமெ - தம் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலைநிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய் கிருபை தாருமே - தம் கிருபை