திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே
புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பிடித்துக்கொண்டால் தான் பேரின்ப வாழ்வை
பெறுவாய் நீ மனமே