துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமை யோடிறங்க
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
காத்தரின் பேரொளி வீசிடுதே - தேவ
நிலை நிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் - தேவ
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் - தேவ
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் - தேவ
பரலோகந்திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் - தேவ