தேடி வந்து மீடடவரே தினம் உமக்கே மகிமை - ஐயா
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - ஐயா
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தமாகட்டுமே - ஐயா
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா