மகிமையின் ஆலயமே! நாமே அவ்வாலயமே!
அவருக்காய் கிரயமாய்க் கொள்ளப் பட்டோம்
தேவ பிள்ளைகளானோம், அவர் சொந்த ஜனமானோம்
- தேவனின்
அவரே சரீரத்தின் சொந்தமானவர்
பரிசுத்தம் காத்துக் கொள்வோம், பரிசுத்த ஜாதியாக
- தேவனின்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
- தேவனின்
அவரின் பிரசன்னம் விரைந்தேகிடுதே
மறுரூபமாகிடுவோம், மகிமையில் சேர்ந்திடுவோம்
- தேவனின்