நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
என் ஜீவனே நல் ஆயனே
(என்) பரிகாரியே பலியானீரே