திகழும் ஒளிப் பிரகாசா!
பதினாயிரம் நாவுகள் போதா
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம் - நிகரே
கையின் சித்திரம் தெய்வம் அல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம் - நிகரே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இயேசு ஆண்டவர் திருவருளே - நிகரே
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தனை மீட்டெடுத்தார் - நிகரே
கால் மிதித்திடும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே - நிகரே
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேன் என்றார்
மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே - நிகரே