நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் - அல்லேலூயா
ஓளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை - அல்லேலூயா
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் - அல்லேலூயா
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் - அல்லேலூயா
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை - அல்லேலூயா