உம் நேம் ( Name) நிலைத்திருக்கும்
தலைமுறை தலைமுறைக்கும்
உம் ஃபேம் (fame) பேசப்படும்
நிரந்தரம் நீர்தானையா
இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர்
நல்லவர் நீர்தானே
நான் பாடும் பாடல் நீர்தானே
தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே
மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்
பிரியமும் நீர்தானே – நான் பாடும்
சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே
சர்வ வல்லவரே-நான் பாடும்
பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர்
தினம் காப்பவர் நீர்தானே-நான் பாடும்
தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்
மேய்ப்பர் நீர்தானே – நான் பாடும்