நேசிக்கும் நல் கர்த்தர் அங்குண்டு
கவலையில்லாத தேசமது
ஒளிமயமே நேசர் முகமே
ஆனந்தமே பரமானந்தமே - நீலவானுக்கப்பால்
அங்கியைத் தோய்த்து வெளுத்தவர்கள்
சதாகாலமும் இயேசுவுடனே
ஆடிப்பாடியே அரசாளுவார் - நீலவானுக்கப்பால்
கைகோர்த்து மகிழ்ந்து போற்றிடுவேன்
புதிதேசமே எந்தன் வாஞ்சையே
கிறிஸ்து இயேசுவே எந்தன் மேன்மையே - நீலவானுக்கப்பால்