தேவனை நோக்கி அமர்ந்திரு
விரைவில் வருமே வந்திடுமே
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே
வருமே வந்திடுமே
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே)
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகும் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும்