நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
ஆராதனை ஆராதனை
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
ஆராதனை ஆராதனை
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
ஆராதனை ஆராதனை
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
ஆராதனை ஆராதனை