விரைந்து வாருமே ஏங்குதென் உள்ளமே
காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே
வாருமே நீர் விரைவாகவே - நேசரே
ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்
காத்திருக்கும் பரிசுத்த கூட்டமும்
வானிலே நாம் ஆடிப்பாடுவோம் - நேசரே
அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்
கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே
விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன் - நேசரே