இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் - என்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் - என்
என் மணவாளரே உமை மறவேன்
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் - என்
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் - மகிழ்ச்சி
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை