திகையாதே, கலங்காதே
அறிந்து கொண்டேன், நீ என்னுடையவன்
உன்னோடு கூட நான் இருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை - பயப்படாதே
அஞ்ச வேண்டாம், வேகாதிருப்பாய்
அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது - பயப்படாதே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே - பயப்படாதே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே - பயப்படாதே
பூர்வமானதைச் சிந்திக்க வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் - பயப்படாதே
என்றும் ஜெபத்தை தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே! - பயப்படாதே
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்லேலூயா பாடிடுவாயே
வல்ல கரத்தால் நடத்திடுவேனே! - பயப்படாதே