உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே கலங்காதே
நானே உன் தேவன் – 2
பெலன் தந்திடுவேன் – 2
நீதியின் வலக்கரத்தால்
தாங்கியே நடத்திடுவேன் – 2
நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2
வெறுத்து விடவில்லை
உன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே
வழுவாமல் காத்துக்கொள்வேன் – 2
(உன்னை) அழைத்தவர் நான் தானே
நடத்துவேன் இறுதி வரை – 2
எரிச்சலாய் இருப்பவர்கள் – 2
உன் சார்பில் வருவார்கள்
உறவாடி மகிழ்வார்கள் – 2