- Song Book:
Jebathotta Jeyageethangal
S.J.பெர்க்மான்ஸ்
பயமில்லையே.. பயமில்லையே
பயமே எனக்கு இல்ல இனி
அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு
(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)
எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்