பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே
லா லா லா லா லா லா (4)
ஏற்றணைக்கும் ஏக்கத்தில் குரல் கேட்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன்
கனிவான எருசலேமே - பரம
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்
மேலான எருசலேமே - பரம
சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிவாரமாம் தூதர்கள் சூழ நின்றேன்
ஆஹா என் எருசலேமே - பரம
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே
சுயாதீன எருசலேமே - பரம
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
அலறலில்லை அழுகையின் சோகமில்லை
தலை நகராம் எருசலேமே - பரம