பரலோகம் வந்தும்மைக் காண்பேன்
அந்த நாள் வெகு சமீபம் - நானும்
ஆண்டவர் இயேசுவைக் காண்பேன்
என் கண்ணால் கண்டிடுவேன்
அந்நாள் என் வாழ்வின் பொன் நாள்
என் வாழ்வின் பாக்கிய நாள்
காயங்கள் கண்டும்மை துதிப்பேன்
என் கண்ணீர் துடைக்கும் உம் கரத்தை
தேவா பற்றியே போற்றிடுவேனே -அந்நிய
என் வீடு கண்டும்மை துதிப்பேன்
சுத்தவான்களோடே சேர்ந்து
பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் - அந்நிய
அச்சாயல் கண்டும்மை துதிப்பேன்
பளிங்கு கடல் ஓரம் நின்று
தேவா என்றென்றும் உம்மைப் போற்றிடுவேன் - அந்நிய
தூதரோடு சேர்ந்தே துதிப்பேன்
என் பாக்கியம் நான் அங்கு கண்டு
தேவா கண்ணீரோடும்மை போற்றிடுவேன் - அந்நிய
பொற்கிரீடம் என் சிரசில் சூட
அக்கிரீடம் அங்கு நான் பெற்று
தேவா நானும்மை என்றும் போற்றிடுவேன் - அந்நிய
என்னிடம் நன்மை ஒன்றில்லை
எனக்காய் எல்லாம் செய்து முடித்த
தேவா உம்மன்பை என்றும் போற்றிடுவேன் - அந்நிய