பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
குறைகள் தீர்ப்பவரே
திடன் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறதலே - எங்கள்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் - தினம்
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே - எங்கள்
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் - தினம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்