பரிசுத்தமாக்கும் ஐயா
பரிசுத்தமின்றி தரிசிப்பார் உண்டோ
பரிசுத்தரே மகா பரிசுத்தரே
அழைத்தீரே பரிசுத்தரே
கர்த்தர் நீர் விரும்பும் பரிசுத்தம் காண
படைக்கிறேனே முற்றும் படைக்கிறேனே
நான் நீதிக்கு அடிமையே
பரிசுத்தமாகுதல் கிடைக்கும் பலனே
நற்பலனே அது பெரும் பயனே
உம் இரக்கத்தால் பரிசுத்தமே
ஆவியால் பரிசுத்தம் (2)
வேண்டுமையா இப்போ வேண்டுமையா
மரித்திட பாவத்திற்காய்
உலகத்தை வெறுத்து இயேசுவை நோக்கி
ஒடிடவே ஒன்றாய் ஒடிடவே