பொழியுமே இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே
உம் ஆவியால் நிரப்பிவிடும்
அனுப்பியே தாரும் - பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கிவிடும் - பரிசுத்தாவி
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்
தேவலோகத்தின் இரகசியங்களை
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் - பரிசுத்தாவி
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் - பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும் - பரிசுத்தாவி
பரலோகத்தின் பலகணிகள்
திறந்தே கொட்டிடும் - கிருபை சொரியும்
திருப்திபடுத்தி அனுப்பும் - பரிசுத்தாவி