தாரகம் நீரல்லவோ
நாயகன் நீரல்லவோ
சமூகமளிப்பேனென்றீரே
உம் அருள் வாக்கு போல அளித்தீரே உம் சமூகம்
உம்மை துதித்து மகிழ்வேன் - பல
அதிசயம் விளங்க செய்யுமே
இது சமயமுமது இதயம் விரும்புவதை
இறையே விளங்கச் செய்வீரே - பல
தாகமுடனடைந்திட
நாவின்றிக் கையினால் நவீன இதயம் பெற்று
நசரேயனை பின் சென்றிட - பல
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே - பல
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே - பல