படைக்கின்றேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர்.
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி - கல்வாரி
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் - கல்வாரி
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் - கல்வாரி
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவர் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் - கல்வாரி