பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தோனித்திடுதே
தேவாதி தேவன் ஏக சுதன் படும்
பாடுகள் எனக்காக - பாரீர்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே - பாரீர்
முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே - பாரீர்
துன்ப வேளையில் தேற்று வாரின்றியே
நொந்து அலறுகின்றார் - பாரீர்
எண்ணியெண்ணியே உள்ளம் கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்