பாவி என்றும் பாராமலே
பாசம் என்மேல் வைத்தவரே
வியாதி நேரத்தில் வைத்தியராய்
ஆபத்தில் இருந்தென்னை மீட்டெடுத்தீரே
கண்மணி போல் என்னை காத்து வந்தீரே - பாவிகட்காய்
பரமன் இயேசுவே வந்திடுமே
மகிமையின் சாயலை நான் பெற்று வாழ
உள்ளத்தில் மகிழ்ச்சியும் அடைந்திடுவேனே - பாவிகட்காய்
அழைத்தீர் என்னையும் சித்தம் செய்ய
நிலைத்தென்றும் நான் கனி தந்திட
நித்திய கிருபைகள் ஈந்திடுமே - பாவிகட்காய்