தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
நீசதூசி என்னை நேசிக்கலானீரே !
நீர் என் சொந்தம், என்றென்றுமாய்
ஆவி ஆத்மா சரீரம் பலியாய்ப்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்.
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
பறித்திழுத்தெந்தனை உம் சொந்தம் ஆக்கினீர்
- என் இயேசுவே
என்னை உம் கைகளில் ஈந்திட்டேன், நாயகா!
உம் நோக்கம் என்னிலே பூரணம் ஆகட்டும்.
- என் இயேசுவே
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
பட்சிக்க விட்டிடீர்; அமிழ்த்தவும் பார்த்திடீர்.
- என் இயேசுவே
நேசர் கரத்தினில் முற்றுமாய் வைத்திட்டேன்
வாஞ்சிப்பதெதுவோ சம்பூர்ணம் ஆகட்டும்
- என் இயேசுவே
இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன்
- என் இயேசுவே