இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் - உம்மை
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியா்களும் நாங்களே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்