பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத் தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கி பாடவே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்கினிப் பிரகாசம்
சொல்லரும் சந்தோஷம் உள்ளம் ஊற்றுமே - வானம்
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சுத்த ஜீவ ஊற்றே பொங்கி பொங்கி வா - வானம்
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம் - வானம்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே - வானம்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
இயேசுவே இறைவா வேகம் வாருமே - வானம்