புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாம் என்றும் பாடித் துதிப்போம்
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில்
சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் - இயேசு
சோர்ந்தழிந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயதொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் - இயேசு
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில்
தந்து ஜீவபாதை என்றும் ஓடுவேன் - இயேசு
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம்
யாவுமின்று ஈந்து தொண்டு செய்குவேன் - இயேசு