சாற்றிடுவேன் சர்வ வல்லவரை
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் என்றும் பாடுவேன்
ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன்
கண்மணிபோல் கருத்துடனே
கைவிடாமல் என்னைக் காத்தனரே - போற்
இத்தனை ஆண்டுகளாய் அளித்தார்
கர்த்தரே நல்லவர் என்பதையே
கருத்துடனே ருசித்திடுவேன் - ஆ
பரிசுத்த ஆவியானவரே
வெள்ளம் போல் சத்துரு வந்திடினும்
விரைந்தவரே கொடி யேற்றினார் - ஆ
பணிவுடன் செலுத்தி ஜெபித்திடுவேன்
ஆபத்து காலத்தில் கூப்பிடுவேன்
ஆண்டவரே செவி கொடுப்பார் - ஆ
நித்திய ஆலோசனை அளிப்பார்
முடிவிலே மகிமையில் சேர்த்திடுவார்
மகிழ்ந்திடுவேன் நித்தியமாய் - ஆ