மகிழ்ந்து பாடிடுவேன்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பெலன் என் கீதமுமானார்
கரம் பிடித்து என் இரட்சிப்புமானார் - மகிமை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே - மகிமை
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக் கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் - மகிமை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் - மகிமை
தீர்க்கதரிசி மிரியாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன் - மகிமை