வருகிறார் மேகமீதில்
ஆ……ஆ…. ஆனந்தமே, ஆனந்தமே
ஆனந்தமே, பேரானந்தமே.
தூத தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம், ஆனந்தமே
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
ஆயத்த விழிப்புடனே, பூரண மடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே