பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
கொடுப்பவர் உண்டு கொண்டாடு
அதுவே உனக்கு SAFE GUARD
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
கூனிக் குறுகிப் போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணையாக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்துடுவார்