இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
இது மாபெரும் பாக்கியமே
பரலோகமதின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ .. ஆ
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ .. ஆ
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் - ஆ .. ஆ