மணவாளன் இயேசு மனமகிழ
கறை திரை, நீக்கி, திருச்சபையாக்கி
காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்
ஸ்தோத்திரமே ! துதி சாற்றிடுவோம்
புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்
இராஜாதி இராஜன் இயேசுவோடே
இன, ஜன நாடு, தகப்பனின் வீடு
இன்பம் மறந்து சென்றிடுவோம் - கோத்திரமே
சிறந்த உள்ளான மகிமையிலே
பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
பாவைகளாகப் பறந்திடுவோம் - கோத்திரமே
அவர் மணவாட்டி ஆக்கினாரே
விருந்தரை நேசக் கொடி ஒளி வீச
வீற்றிருப்போம் சிங்காசனத்தில் - கோத்திரமே
தயாபரன் இயேசு புறப்படுவார்
மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
மன்னன் மணாளன் வந்திடுவார் - கோத்திரமே