மறுக்காமல் ஒருவிசை மன்னித்தருளும்
மன்னிக்கும் தேவனே உமக்கு நிகர் யார்
நடத்தி முடிக்கவோ பெலன் இல்லையே
எல்லாம் உம் கிருபையால் ஆகும் என்றேன்
பரிதாபம் அனுதினம் வீழ்கின்றேன் நான்
சோராமல் பயணம் தொடர்ந்திடுவேன்
அயராது அணுகியே நெருங்கிடுதே
தளர்ந்து திரும்ப மனமும் உண்டு
தைரியப்படுத்தும் ஆவி தாரும்
யூதாசைப்போல் நான் காட்டிக்கொடுத்தேன்
பரபாசாம் எந்தன் சிலுவை ஏற்றீர்
அமைதியின்றி சிறையில் வாழ்கின்றேன் நான்
என் வாழ்வை இன்றே தந்திட்டேன் நான்