என்னால் மறக்கப்படுவதில்லை
கைவிட நான் மனிதனல்ல
நான் உன்னை மறப்பதில்லை
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன்
எதிர்கால பயம் வேண்டாம்
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்
விலகாது என் கிருபை
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம்
ரொகோபோத் தொடங்கிவிட்டது
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை
உம்மால் மறக்கப்படுவதில்லை
கைவிட நீர் மனிதனல்ல
நீர் என்னை மறப்பதில்லை
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உருவாக்கினீர்
எதிர்கால பயமில்லையே
என் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்
விலகாது உம் கிருபை
விலை கொடுத்து வாங்கி உள்ளீர் – என்னை
உமக்கே நான் சொந்தம்
ரொகோபோத் தொடங்கிவிட்டது
நான் பலுகி பெருகிடுவேன்
நான் குறுகி போவதில்லை