மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
கோடி கோடி நன்றி ஐயா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்