மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்