நிலைவிட்டு பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகிடாதே
என் சமாதானம் நிலைக்குமென்றாரே
வானவரின் வாக்குகள் மாறிடாதே
மானிடர்கள் மனம் மாறிடுவார்
மாறிடா இயேசுவை நம்பி நிற்போம்
என்னை நோக்கி கூப்பிடு என்றுரைத்தார்
அறிவிப்பேன் நிச்சயம் என்றனரே - வானம்
திக்கற்றோனாய் ஒரு போதும் கைவிடேன்
நித்தமும் தாங்கிடுவேன் என்றனரே - வானம்
ஏராளம் வாசஸ்தலங்கள் அங்குண்டே
என்னை சீயோனில் சேர்க்க வந்திடுவார் - வானம்