மண்ணில் எம்மைப் பிரித்தே
மங்கா உந்தனின் சேவையை எங்கும் செய்திடவே
துங்கவனே எம்மைக் கண்டீர்
அழைத்த மா அன்பிதுவே
அன்பில் பரிசுத்தனாய் என்னை நிறுத்த பிதா
நினைத்த பேரன்பிதுவே.
பரனே அன்பாய் அழைத்தீர்
வீடும் நாடும் இனம் ஜனம் யாவும் மறந்து நாம்
இயேசுவே உம்மை பின் செல்ல - அன்பி
சுவிசேஷ சேவையிலே
நிந்தை அவமானம் தொல்லைகள் துன்பங்கள் துக்கங்கள்
உந்தனுக்காய் சுமந்தே - அன்பி
தாசர் எமக்களித்தீர்
திவ்ய தூதுகள் அளித்தே சபையை வளர்த்திட
தந்தீர் அப்போஸ்தலரை - அன்பி
பொற்பரன் இயேசுவுடன்
சீயோன் சிகரமீதில் நின்று ஆளுகை செய்யும் நாள்
சீக்கிரம் வந்திடுதே - அன்பி