மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை ஏதும் வேறில்லையே
இணையேதும் வேறில்லையே
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே - ஆ! இயேசு
உள்ளம் போல நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே - ஆ! இயேசு
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு