ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க
அவரே வாராரே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார் - மேக
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே - மேக
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே
கூவியே கொடுத்திடுவார் - மேக
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே அறிவார் - மேக
அதை அறிவிக்கின்றதே
அப்போஸ்தலர் தீர்க்கத்தரிசிகளெல்லாம்
அதையே அறிவிக்கின்றார் - மேக
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும்
ஜோதியின் ஆளுகையில் - மேக
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே - மேக