- Song Book:
Jebathotta Jeyageethangal
S.J.பெர்க்மான்ஸ்
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு? இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேறு
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்
உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா, நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா......
எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா
உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்
எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்