விண் மன்னன் இயேசென்னை அழைக்கின்றார்
வீணானதே மாறிடுதே
விண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே
மாலுமி இயேசுவின் கப்பல் ஏறி
அக்ககரையோரம் நான் சென்றிடுவேன்
அங்கே வரவேற்புக் காத்திருக்கும் - விண்
பார்த்து பரவசம் பொங்கிடுமே
கண்ணீர் கவலையும் அங்கில்லையே
கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் - விண்
ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும்
கர்த்தரின் கைகோர்த்து நடந்திட
காத்து தவிக்கின்றதென் உள்ளமே - விண்
பூக்கள் நடுவே உலாவிடுவேன்
தூதர்கள் பக்தர்களோடு வாழும்
தூய பேரின்பத்தை நாடுகின்றேன் - விண்
நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே
தேவ சமூக இளைப்பாற்றுதல்
தேவை அதை நாடிக் கண்டடைவேன் - விண்