வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்
பேரன்பு பின் தொடரும் – உம்
இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – 2
காக்கும் தகப்பன் நீரே – 2
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – 2
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்